அசோக் குமார் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இளங்கோவன் உரையாடல் எழுத, ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், சித்தூர் வி. நாகையா, என். எஸ். கிருஷ்ணன், எம். ஜி. இராமச்சந்திரன், பி. கண்ணாம்பா, டி. வி. குமுதினி மற்றும் பலர் நடித்தனர். நியூடோன் ஸ்டுடியோவில் மதுரை முருகன் டாக்கி பிலிம் கம்பெனியால் இது தயாரிக்கப்பட்டது.