கே. பி. சுந்தராம்பாள், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் நடிப்பில் 1935 இல் வெளிவந்தது "
பக்த நந்தனார்" திரைப்படம். மணிக் லால் டாண்டன் இயக்கியிருந்தார். கருநாடக இசைக்கலைஞர் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் நடித்த ஓரேயொரு திரைப்படம் இதுவாகும். இத்திரைப்படத்தின் படச்சுருள்கள் முழுமையாக எரிந்து போயின.